
நன்றி .தினமணி




நூலகப் போட்டியில் மாணவிக்கு நூல்கள் பரிசு













திருக்கோவிலூர், ஜூன் 22:
திருக்கோவிலூர் ஒன்றிய அளவில் நடைபெற்ற நூலக கோடை முகாமில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவிக்கு புதன்கிழமை நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமில், திருக்கோவிலூர் ஒன்றிய அளவில் வெற்றிப்பெற்ற வாசவி உதவிபெறும் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ச.புஷ்பவள்ளிக்கு, பொது நூலகத்துறை சார்பில் நல்லாசிரியர் புலவர் ந.தேசிகன் நூல்களை பரிசாக வழங்கினார்.
அப்போது வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிஞர்.உதியன், எழுத்தாளர் விருதுராஜா, நூலகர்கள் மு.அன்பழகன், த.சர்வர்கான், மொ.வெங்கடாஜலபதி, பா.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக