திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார்.
மணலூர்ப்பேட்டை வாசகர் வட்டக்குழுத் தலைவர் கு.ஐயாக்கண்ணு, நூலகப் புரவலர் ச.அருண்குமார், தேவரடியார்குப்பம் வாசகர் வட்டக்குழுத் தலைவர் சக்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பணி நிறைவு பெற்ற ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை தென்னிந்தியக் களப்பணி அலுவலர் டாக்டர் ர.ராமசாமி நூலகத்தின் அவசியம் அதன் செயல்பாடுகள் குறித்து பேசினார். பின்னர் நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் மணலூர்ப்பேட்டை கிளை நூலகங்கள் வளர்ச்சிக்காக தலா ரூபாய் 1000 செலுத்தி புரவலராக இணைந்தார்.
இதேபோல் திருக்கோவலூர் நூலக வளர்ச்சிக்காக வழக்குறைஞர் எம்.பாண்டு ரூபாய் 1000 செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தார்.
இந் நிகழ்ச்சியில் வாசகர் வட்ட உறுப்பினர்கள் இராம.சுதாகரன், ம.விருதுராஜா மற்றும் பணி பாளர்கள் சு.சம்பத் . இரா.கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக