திருக்கோவிலூரில் புத்தக கண்காட்சி
சார்-ஆட்சியர் தொடங்கிவைத்தார்
திருக்கோவிலூர், ஜன. 8:
திருக்கோவிலூரில் தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் இயங்கும் கிளை நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை சார்-ஆட்சியர் த.ஆனந்த் கலந்துகொண்டு சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்நூலகத்தில் 35 ஆயிரம் நூல்களும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 81 புரவலர்கள் உள்ளனர். நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்துச் செல்லக்கூடிய இந்நூலகத்தில் இந்தாண்டு பெறப்பட்ட 300 தலைப்பிலான நூல்கள் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டது. இக்கண்காட்சியை சார்-ஆட்சியர் த.ஆனந்த் தொடங்கிவைத்துப் பேசினார்.
அப்போது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கு.நெடுஞ்செழியன், தேவனூரைச் சேர்ந்த ராமதாஸ், ஓய்வுப்பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி இந்நூலக புரவலராக இணைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி உதியன் தலைமை தாங்கினார். புலவர் பெண்ணைவளவன், கவிஞர் அருள்நாதன் தங்கராசு, நல்லாசிரியர் அப்பர்சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
ஆசிரியர்கள் ரவி, ஜானகிராமன் புரவலர்கள் ரகோத்தமன், கருப்பன், கண்ணன், ஜெயக்குமார், சேகர், சங்கராபுரம் நூலகர் செழியன் மற்றும் வாசகர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலகர்கள் த.சர்வர்கான், மொ.வெங்கடாஜலம், பா.முருகேசன், சு.செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.
படவிளக்கம்
------------
திருக்கோவிலூரில் நூலக கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிடும் சார்-ஆட்சியர் த.ஆனந்த்.